• தினம் ஒரு கூட்டு

கீரை மிளகூட்டல்.


- விஜி சத்யா, மாசாசூசெட்ஸ், அமெரிக்கா.





- தேவையானவை

- கீரை - ஒரு கட்டு

- பாசிபருப்பு அல்லது துவரம்பருப்பு- 1/4 கப்

- வற்றல் மிளகாய் - 2

- மசாலா அரைக்க:

- தேங்காய துருவியது - 4 தே.கரண்டி

- சீரகம் 1/2 டீ ஸ்பூன்

- பச்சரிசி மாவு -1/2 டீ ஸ்பூன்.

- தாளிக்க:

- தேங்காய் எண்ணெய் 1 தே.

- க கடுகு 1/2 தே.க

- உளுந்தம்பருப்பு 1/2 தே.க

- வற்றல் மிளகாய்- 1

- கறிவேப்பிலை கொஞ்சம்.

-

செய்முறை:

துவரம்பருப்பு அல்லது பாசி பருப்பை வேகவைத்தெடுக்கவும். கீரரையை நல்ல மண்போக அலசி பொடியாக அரிந்து வைக்கவும். பாத்திரத்தில் எண்னெய் விட்டு தாளிக்க உள்ளதை போட்டு தாளிக்கவும். கீரையை சேர்த்து வதக்கி அதில் வெந்த பருப்பு, உப்பும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அரைத்துள்ள மசாலாவை சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும். கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து 5 நிமிடம் வேகவிட்டால் கமகம கீரை மிளகூட்டல் ரெடி.

கீரை சாப்பிட பிடிக்காதவர்கள்கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க. சூடான சாதத்தில் இந்த கீரை முளகூட்டலை ஊற்றி பிசைந்து சாப்பிட, படு ருசியாக இருக்கும். இதற்கு தொட்டு கொள்ள பொரித்த அப்பளம், அல்லது வாழைக்காய், உருளை வறுவல் சூப்பராக இருக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :