• தினம் ஒரு கூட்டு

முடக்கத்தான் கீரை கூட்டு


- கே.எஸ்.கிருஷ்ணவேணி, பெருங்குடி.

தேவையானவை:

சுத்தம் செய்து ஆய்ந்த முடக்கத்தான் கீரை - 1கப்

பயத்தம் பருப்பு - 1/2 கப்

தேங்காய் துருவல் - 1கப்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1/2 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்.

தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

செய்முறை:

முடக்கத்தான் கீரையை அலசி தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். பயத்தம் பருப்பை தனியாக குழைய வேக விடவும். தேங்காய், மிளகாய், சீரகம் மூன்றையும் சேர்த்து நன்கு அரைத்து விடவும். இப்போது வெந்த கீரையை நன்கு மசித்து அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து குழைய வெந்த பருப்பையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டவும்.

சுவையான, சத்தான கீரை மசியல் ரெடி.

இந்த கீரை முட்டி வலி, வாயு தொல்லை, கை கால் மூட்டுகள் வீக்கத்தை குறைக்கும். சூடான சாதத்துடன் சிறிது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :