• தினம் ஒரு கூட்டு

பலா முசு உருண்டைக் கூட்டு


-ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்

தேவையானவை :

பலா முசு (பலா பிஞ்சு ) - 150 கிராம்

பச்சை பயறு - 100 கிராம்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - ருசிக்கு

கடலை பருப்பு , துவரம் பருப்பு - தலா ஒரு டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் - 50 கிராம்

சீரகம் - ஒரு டி ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

பெருங்காயம் - விருப்பத்திற்கு ஏற்ப

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

கொத்துமல்லி - ஒரு தூவல்

தேங்காய் எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு

கடுகு , உளுந்து - தாளிக்க தேவையான அளவு

செய்முறை :

பலா முசுவை தோல் நீக்கி மிக்சியில் ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும் . ( இல்லையெனில் பொடியாக அறிந்து கொள்ளலாம்). பச்சை பயிரை இரண்டு மணிநேரம் ஊறவிட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பலா முசுவை இட்லிக் குக்கரில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் பச்சைப் பயறு மற்றும் வேகவிட்டு பலா முசு , உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். இத்தனையும் ஆவியில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

மிக்சியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் போன்றவற்றை மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு ஸ்பூன் கடலை பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் துவரம் பருப்பை மைய வேகவிட்டு , அரைத்த கலவையை சேர்த்து , இதற்க்கு தேவையான உப்பு மட்டும் சேர்த்திடவும். 10 நிமிடங்கள் கொதி வந்ததும் , மெதுவாக உருண்டைகளை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் , கடுகு , உளுந்து , கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் பொரித்து சேர்க்கவும் .கொத்துமல்லி தூவி பரிமாறவும் .புதுமையான , அனைத்து சத்துக்கள் நிறைந்த அரிதான கூட்டு . சுவை அபாரமாக இருக்கும்.விருப்பப் பட்டால் , மிளகுத் தூள் எலுமிச்சை சாறு சேர்த்து கூட சேர்த்து கொள்ளலாம்.

Comments

Janakiparanthaman says :

வித்தியாச மான கூட்டு,

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :