• தினம் ஒரு கூட்டு

புடலங்காய் பால் கூட்டு .


- ஜெயா சம்பத், கொரட்டூர்

தேவை :-

பிஞ்சு புடலங்காய் -கால் கிலோ,

பச்சை மிளகாய் -3,

கறிவேப்பிலை -கொஞ்சம்,

கெட்டியான தேங்காய்ப் பால் -கால் கப்,

பசும்பால் -கால் கப்,

கடுகு, உளுந்தம் பருப்பு -தாளிக்க,

சர்க்கரை -1ஸ்பூன்,

உப்பு – சுவைக்கேற்ப.

செய்முறை :- புடலங்காயை விதைகளை நீக்கி, பொடியாக நறுக்கவும். அரை கப் நீரில் புடலங்காய், பச்சை மிளகாய், கறிவேப்பிலையைப் போட்டு.. வேக வைத்துக் கொள்ளவும். பின் தேங்காய்ப்பால், பசும்பால் சேர்த்துக் கொதிக்க விடவும். கடைசியில் சர்க்கரை, உப்பு சேர்க்கவும். அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து... கூட்டில் சேர்க்கவும். பால் மற்றும் சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும் இந்தப் பால் கூட்டு, மிகவும் ருசியானது. சத்தானது...

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :