• தினம் ஒரு கூட்டு

பரங்கிக்காய் - பலாக்கொ ட்டை கூட்டு.


- ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்.

தேவையானவை :

சிவப்பு பூசணி – 400 கிராம்.

துவரம் பருப்பு- 50 கிராம்

முளை கட்டிய பச்சை பயறு-30 கிராம்.

பிரவுன் கொண்டை கடலை- 40 கிராம்

பலாகொட்டை- 6,

தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்,

நெய் - 4 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,

உப்பு- தேவையான அளவு

தேங்காய் - அரை மூடி, துருவியது,

பச்சை மிளகாய்- 4

சீரகம்- அரை டீஸ்பூன்

கடுகு - 1டீஸ்பூன்,

பெருங்காயதூள்- அரை டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய்- 2,

மல்லி தழை - ஒரு கைப்பிடி.

செய்முறை :

பரங்கிக் காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். துவரம் பருப்பை குக்கரில் குழைய வேக வைத்து எடுக்கவும். கொண்டை கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் தனியா வேக வைக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பலா கொட்டையை தோல் சீவி இரண்டிரண்டாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு பலா கொட்டை முளை கட்டிய பச்சை பயறு இரண்டையும் போட்டு வேக விடவும். பாதி வெந்ததும், நறுக்கிய காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கிளறிவிட்டு வேக விடவும். நன்கு வெந்ததும், வேக வைத்த துவரம் பருப்பு மற்றும் கொண்டை கடலையை சேர்க்கவும். அனைத்தும் நன்றாக சேர்ந்து கொதிக்கையில், அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட்டை சேர்க்கவும்.

மீண்டும் கொதி வந்து பச்சை வாசனை போனதும் கீழே இறக்கி வைக்கவும். பின், சிறு கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய், நெய் சேர்க்கவும். சூடானதும் கடுகு, பெருங்காய தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, அதை கூட்டில் சேர்த்து கலந்து விடவும். ஒரு பிடி மல்லி இலைகளை பிய்த்து மேலே தூவி விடவும். சுவையான பரங்கி -பலா கூட்டு தயார்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :