• தினம் ஒரு கூட்டு

அத்திக்காய் கூட்டு!


சுந்தரி காந்தி, பூந்தமல்லி.

தேவையானவை:

அத்திக்காய் - 1/4 கி

தக்காளி - 2

வெங்காயம் - 1

வேர்க்கடலை – 1 டீஸ்பூ ன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 3

துருவிய தேங்காய் - 3 டீஸபூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை : .

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அத்திக்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். அத்திக்காய் விதை நீக்கி புழு இல்லாமல் சுத்தம் செய்யவும். வேர்க்கடலையை பொடித்து வைக்கவும். பின் சுத்தம் செய்த அத்திக்காயை, கொதிக்கும் நீரில் வேகவைக்கவும்.

.பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்௧வும். .பிறகு அதனுடன் தக்காளி ,தண்ணீர் சேர்த்து, கொதித்து வரும்போது பொடித்த வேர்க்கடலை, நறுக்கிய அத்திக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். ஒரு கொதி வந்த பின் தேங்காய் துருவல் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கினால், ருசியான அத்திக்காய் கூட்டு தயார்.

குறிப்பு: அதிகப்படி ருசிக்கு கடலை பருப்பு,அல்லது சிறு பருப்பு சேர்கலாம். இந்த கூட்டு சாம்பார் சாதம், லெமன் சாதம்,புளி சாதம் மற்றும் சப்பாத்திக்கு சரியான சைட் டிஷ். இரும்பு சத்து நிறைந்ததும்கூட!

Comments

Ghandhi says :

சிறப்பு, புதுசு இது

Bharathy Ghandhi says :

Arumai... healthy recipe

Sethu says :

Arumai.........Vazhga Valamudan

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :