• தினம் ஒரு கூட்டு

கொழுக்கட்டை கூட்டு


- என் கோமதி, நெல்லை.

தேவையானவை:

பச்சரிசி மாவு -1/2கப்

முருங்கை இலை -5 கொத்து.

சீரகம்- 1/2டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப.

நெய் - 1டீஸ்பூன்

அரைப்பதற்கு:-

தேங்காய்ப்பூ - 1டேபிள் ஸ்பூன்.

பச்சை மிளகாய் -1

சீரகம்- 1/2டீஸ்பூன்

பூண்டு – 2 பல்

செய்முறை :-

பச்சரிசி மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து,நீர் விட்டுப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும்.அகலமான வாணலியை,அடுப்பில் வைத்து, நீர் ஊற்றி கொதிக்க விடவும்.அதில், கொழுக்கட்டை உருண்டைகளைப் போட்டு, வேக வைக்கவும். பின்னர், அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து, வாணலியில் போட்டு, உப்பு சேர்க்கவும். கூட்டு ஒன்றுசேர்ந்து கலந்து வந்ததும் இறக்கி, நெய்யில் சீரகம், முருங்கை இலை தாளித்து சேர்க்கவும்.கொழுக்கட்டை கூட்டு தயார்.இதை எல்லா வகை குழம்பு சாதத்திற்கும்தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :