• TRENDING | பர பர

இன்று வெளியாகிறது தளபதி 65 பட ஃபர்ஸ்ட் லுக்! ரசிகர்கள் கொண்டாட்டம்!





தமிழக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நடிகர் விஜய்யின் 65-வது படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் மீது ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நாளை விஜய் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை முன்னிட்டு அவர் நடித்து வரும் தளபதி 65 படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இதை ஆவலுடன் எதிர்நோக்கி தமிழகமே காத்துள்ளது.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் விஜய், பூஜா ஹெக்டே உடன் யோகி பாபு, ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஜியார்ஜியாவில் இந்த படத்திற்கான முதற்கட்ட ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகள் துவங்கப்படும் என தகவல்கள் தெரியவந்துள்ளன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :