• JUST IN | சுட சுட

இங்கிலாந்தில் 3-வது அலை தொடக்கம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!





தற்சமயம் உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் 3-வது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா 2-ம் அலை முடிவுக்கு வந்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தில் இப்போது கொரோனா 3-வது அலை தொடங்கியுள்ளதாக வைரஸ் மற்றும் தடுப்பூசி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பரவி வருவது மிகவும் ஆபத்தான டெல்டா வைரஸ் ரகம் என எச்சரித்துள்ளனர்.

கொரோனா 2-ம் அலையைக் காட்டிலும் பிரிட்டனில் 3-வது அலையின் வீரியம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து அரசு கவனமாக கையாள வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தடுப்பூசி ஆய்வாளரும் பேராசிரியருமான ஆடம் பின் கூறியதாவது, "டெல்டா ரக கரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக நாட்டின் பெரும்பான்மையான குடிமக்களின் நலனை காக்க முடியும்." எனக் கூறியுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :