• JUST IN | சுட சுட

புதிய கல்வியாண்டுக்கான பாடதிட்டம்: நாளை முதல் தொடக்கம்!





தமிழநாட்டில் புதிய கல்யாண்டுக்கான பாடதிட்டங்கள் நாளைமுதல் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகம் வழங்கும் திட்டம் மற்றும் அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.

தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி தொடர்ந்து ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால் புதிய பாடங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் நாளை முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது. தமிழக அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்.

புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும் மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்று அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :