• JUST IN | சுட சுட

நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா: அசையா சொத்துகளை ஏலம் விட முடிவு!





இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், அந்நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை ஏலம் விட முடிவெடுத்துள்ளது.

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது அந்ந்றுவனத்தின் கடன் சுமை 60 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே கடும் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தொடர் வருவாய் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை ஏலம் விட ஏர் இந்தியா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள 14 அசையா சொத்துகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவன அலுவலங்கள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளை வாங்க விரும்புவோர் ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் www.airindia.in இணையதளத்தில் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

கேஆர்எஸ். சம்பத் says :

ஏர் இந்தியா மற்றும் பிஎஸ்என்எல் -எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் காணாமல் போவது வருத்தம் அளிப்பதாய் இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :