• TRENDING | பர பர

உலகின் 3-வது மிகப் பெரிய வைரக்கல் கண்டுபிடிப்பு!





ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் 3-வது மிகப்பெரிய வைரக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பெரிய வைரக் கற்களும் இதே நாட்டில்தான் முன்னர் கண்டெடுக்கப் பட்டது. இப்போது 1,098 காரட் அளவுக் கொண்ட உலகின் 3-வது மிகப்பெரிய வைரம் கண்டு பிடிக்கப்பட்டது.

73 மி.மீ நீளம், 52 மி.மீ அகலம், 27 மி.மீ தடிமன் கொண்டுள்ள இந்த வைரக்கல்லை அந்நாட்டு அரசின் டப்ஸ்வானா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரத்தை கொரோனா தொற்று குறைந்த பிறகு ஏலம் விடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இழப்பை சீர் செய்ய போட்ஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :