• JUST IN | சுட சுட

#BREAKING: யூடியூபில் ஆபாசமாகப் பேசிய `பப்ஜி` மதன் கைது!





யூடியூபில் இளைஞர்களுக்கு பப்ஜி விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என்று கற்றுத் தரும்போது ஆபாசமாக பேசியதாகக் குற்றம்சாட்டப் பட்டு போலீசால் தேடப்பட்டவர் `பப்ஜி மதன்` என்கிற யூடியூபர். இவர் தலைமறைவான நிலையில், இபோது தர்மபுரியில் சற்றுமுன் போலீசார் மதனைக் கைது செய்துள்ளனர்.

பிரபல ஆன்லைன் விளையாட்டான பப்ஜி கேம்களில் எளிதில் வெல்வதற்கான டிப்ஸ் சொல்லித்தருவதாக கூறி, தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் பதிவிட்டு வந்தார் மதன். இதற்குக் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் `டாக்ஸிக் மதன் 18+` என்கிற மற்றொரு யு-டியூப் சேனலையும் தொடங்கினார். இந்த யூடியூப் சேனல்களில் தன்னோடு ஆன்லைனில் விளையாடும் சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே ஆடுவது இவரது வாடிக்கை. பெண்களை இன்னும் மோசமான வார்த்தைகளால் வசைபாடுவாராம். இந்த கேம் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்களை ஆபாசமாகப் பேசிய மதன் மீது புகார்கள் குவிந்தன.

இதனிடையே, சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் பல்வேறு தரப்பினர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய குற்றபிரிவு சைபர் கிரைமில் மட்டும் இதுவரை 150 க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளனவாம். இந்நிலையில் மதனைப் பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது, இந்நிலையில் மதன் தலைமறைவானார் இந்நிலையில் மதன் தர்மபுரி அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே விரைந்த தனிப்படை போலீசார் மதன் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து அவரைக் கைது செய்தனர்

நேற்று முன் தினம் மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :