• JUST IN | சுட சுட

புதிய பப்ஜி கேம்: இந்தியாவில் நாளை அறிமுகம்!





இந்தியாவில் பப்ஜி கேமுக்கு தடை செய்யப்பட்ட நிலையில் இந்தியாவுக்கான புதிய கேமை பப்ஜி நிறுவனம் நாளை வெளியிடுகிறது.

இந்தியாவில் இளைஞர்களால் அதிகம் விரும்பி விளையாடப்படும் பப்ஜி கேம் வன்முறையைத் தூண்டுவதாக இரண்டு மாதங்கள் முன்பு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் கால்பதிக்கும் வகையில் நம் நாட்டுக்காக பிரத்யேகமான கேம் செயலியை பப்ஜி நிறுவனம் உருவாக்கியுள்ளது. ’’ பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா’’ எனப்படும் இந்த கேம் செயலி, நாளை இந்தியாவில் வெளியாகிறது.இந்த புதிய செயலியில் ஓடிபி உள்ளிட்ட வசதிகளுடன், சில கட்டுப்பாடுகளும் இருக்கும் என கூறப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :