• GLITTERS | பளபள

சீன விண்வெளி நிலையம்: 3 வீரர்கள் பயணம்!


அருண் பிரகாஷ்





சீனா விண்வெளியில் சொந்தமாக அமைத்து வரும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 3 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மண்ணைத் தாண்டி விண்ணிலும் ஆதிக்கம் செலுத்த வல்லரசுகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஒன்றுசேர்ந்து விண்ணில் சர்வதேச விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து ஆராய்சீயில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சீன விண்வெளி வீரர்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனை அடுத்து சீனா தற்போது தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. தியான்ஹே என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்திற்கான மைய பகுதியை கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று சீனா விண்ணில் செலுத்தியது. அதன்பிறகு மே 29-ம் தேதியன்று விண்வெளி நிலையத்திற்கான எரிபொருள், விண்வெளி உடைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல தியான்ஹே -2 என்ற சரக்கு விண்கலத்தை சீனா விண்ணுக்கு அனுப்பியது.

இந்த நிலையில், இந்த சீன விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக 3 விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்க போவதாக சீனா ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி அந்த வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அப்பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அந்த 3 விண்வெளி வீரரக்ளும் இன்று (ஜூன் 17) ஷென்ஜோ -12 என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது.

முன்னதாக விண்வெளி வீரர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அங்கு கூடி இருந்த பொதுமக்கள் வீரரக்ளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அந்த 3 விண்வெளி வீரரக்ளும் ஜுகுவான் ஏவுதளத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு காவல்துறையினர் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் விண்கலத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஷென்ஜோ -12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களையும் தாங்கி விண்ணிற்கு செலுத்தப்பட்டது. இந்த 3 வீரர்களும் சுமார் 3 மாதங்கள் சீன விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்சீப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று சீன அர்சு தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல் என சீனா பெருமிதத்துடன் அறிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :