• JUST IN | சுட சுட

கவச உடையில் கலெக்டர்: பொறுப்பேற்ற முதல்நாளே அசத்தல்!





கரூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பிரபு சங்கர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து கருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ பட்டம் பெற்றவர் என்பதால் கலெக்டர் பிரபுசங்கர் கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும், நோயாளிகளுக்கான படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் படுக்கை வசதி குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்குச் சென்ற கலெக்டர், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் கொள்கலனை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

கலெக்டராக பொறுப்பேற்ற முதல் நாளே, கொரோனா வார்டுக்குச் சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்த சம்பவம், கரூர் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :