• JUST IN | சுட சுட

முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்!





தமிழக முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக இன்று காலை 10 மணிக்குப் புறப்பட்டு டெல்லி சென்றடைந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு, காலை 10 மணி அளவில் டெல்லி சென்றடைந்தார் .அங்கு அவருக்கு அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் உள்ளிட்டோர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். பின்னர் ஸ்டாலின் சாணக்கிய புரியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்ப்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர், மாலை 5 மணிக்கு லோக் கல்யாண்மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார். சந்திப்புக்கு பின்பு டெல்லி ITO பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சி அலுவலகத்தை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் மீண்டும் சாணக்கிய புரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வு எடுக்கிறார். நாளை காலை 8 மணிக்கு ஜன்பத் சாலையில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை மரியாதை நியமித்தமாக சந்திக்கிறார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :