• TRENDING | பர பர

கொரோனா பரவலை தடுக்க ஏடிஎம் மெஷினுக்கு வேப்பிலை!





இந்தியாவில் கொரோனா 2-ம் அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பல ஊர்களில் காவல்நிலையம் மற்றும் வீடுகளில் வேப்பிலை கட்டுவது போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ஆறுமுகம் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இவர், ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, நாள் தவறாமல் ஏடிஏம் இயந்திரங்கள் மீது வேப்பிலை வைத்து வருகிறார். அவரது செயல் அப்பகுதி மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

காவலாளியின் நம்பிக்கை அனைவரையும் வாழ வைக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :