• JUST IN | சுட சுட

தாஜ்மஹால் திறப்பு: உற்சாகமாய் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்!





உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான தாஸ்மஹால், இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடும் வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அந்தவகையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தாஸ்மஹால் உள்ளிட்ட பல்வேறு நினைவுச் சின்னங்களும் மூடப்பட்டன.

கொரோனா 2- அலையின்போது கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 3,700 சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூடப்பட்டன. தற்போது வைரஸ் பரவல் கட்டுக்குள் வரத் துவங்கியதையடுத்து அவை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தாஜ்மஹால் திறக்கப்பட்டுள்ளது. அதனுள் ஒரேநேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட நாட்களுக்கு பின்னர் தாஸ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :