• JUST IN | சுட சுட

+2 மதிப்பெண் கணக்கீடு: 3 தலைமை ஆசிரியர்கள் குழு தயாரிப்பு!





தமிழகத்தில் + 2 மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் நிர்ணயம் தொடர்பாக அறிக்கை தயாரிக்க ஒரு கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது. அதில் 3 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் தமிழக அரசு நியமித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் +2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை நிர்ணயிக்க, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் உஷா, சென்னை பல்கலை துணைவேந்தர் கவுரி மற்றும் கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த கமிட்டியில், 3 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இடம் அளிக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

.இவர்கள், 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண், பிளஸ் 1 தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மதிப்பெண் ஆகியவை அடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகளை தயாரித்து வழங்க, ஆலோசனை கூறப்பட்டுள்ளது.. இவற்றில் சிறந்த முறையை பயன்படுத்தி, மாணவர்களின் உயர் கல்வி பாதிக்காத வகையில், மதிப்பெண் பட்டியல் வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளீயாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :