• TRENDING | பர பர

ரூ.95 லட்சம் விலை: டெஸ்லா மின்சாரக் கார் அறிமுகம்!





டெஸ்லா கார் நிறுவனம் மணிக்கு 321 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புதுவகை மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது.

டெஸ்லா கார் நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு போட்டியாக புதியவகை டெஸ்லா மாடல் எஸ் பிளைட் என்னும் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த மின்சார காரின் ஆரம்ப விலை, இந்திய மதிப்பீட்டில் சுமார் 95 லட்சம் ஆகும்.இந்த காரை ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள தகவல்கள்:

இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக சுமார் 321 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். அதாவது மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு மாற்றாக இது அமையும். இந்த டெஸ்லா மாடல் எஸ் பிளைட் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 627 கிலோமீட்டர் வரை செல்லும்.

- இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால், சுமார் 750 கிலோமீட்டர் வரை செல்லும், என்றாலும் விலை மதிப்பீட்டில் டெஸ்லா நிறுவனம் கார் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப் படுகிறது. மேலும் மெர்சிடிஸ் பென்ஸ் காரின் குறைந்தபட்ச விலை இந்திய மதிப்பீட்டில் சுமார் 1.75 கோடியாகும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :