• JUST IN | சுட சுட

சிவசங்கர் பாபா தேடுதல் வேட்டையில் சிபிசிஐடி தீவிரம்!





சென்னையில் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா,அப்பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீஸார் அவரித் தேடி வருகின்றனர்.

.

அப்பள்ளியில் பயின்ற 3 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மாணவிகளை மூளைச்சலவை செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபா உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலியால் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,டேராடூனில் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவசங்கர் பாப அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாகச் சொல்லப் படுகிறது. தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்காக டேராடூன் சென்ற நிலையில் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா காணப்படவில்லை. அவர் அங்குள்ள வேறு ஏதாவது ஆசிரமங்களில் பதுங்கி உள்ளாரா என சிபிசிஐடி போலீசார் தேடிவருகின்றனர். மேலும், அவர் தரைவழி மார்க்கமாக நேபாளத்திற்கு தப்பி செல்லாமல் தடுக்க உத்தரகாண்டில் சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :