• JUST IN | சுட சுட

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை ரத்து: இந்திய ஹஜ் கமிட்டி!





கொரோனா தொற்று காரணமாக சவுதி அரேபியா மக்கள் மட்டுமே இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று நெருக்கடியின் காரணமாக சவுதி அரேபியாவின் உள்நாட்டு மக்கள் மட்டுமே ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள அனுமதிக்கப் படுவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவோருக்கான அனைத்து விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டிமுடிவு செய்துள்ளதாக, இக்கமிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி மக்ஸூத் அகமது கான் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக ஹஜ் பயணத்துக்கு வெளிநாட்டினர் அனுமதிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

(2021-க்கான ஹஜ் யாத்திரை, சவுதி அரேபியா, இந்திய ஹஜ் கமிட்டி)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :