• JUST IN | சுட சுட

ஆதாருடன் பான் கார்டு இணைப்பு: கடைசி தேதி அறிவிப்பு!





ஆதார் அட்டை மற்றும் பான் அட்டைகளை இணைப்பதற்கான காலஅவகாசம் இம்மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தத் தேதிக்குள் இணைக்கத் தவறினால், அவர்களது பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு 2019-ல் அறிவித்தது. அதற்கான காலகசு காலஅவகாசம் பலமுறை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்தது. ஆனால் கொரோனா பரவலால் அந்த அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது, ஆதார் அட்டை மற்று பான் அட்டைகளை இணைக்கும் அவகாசம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அவ்வாறு இணைக்கத் தவறினால், அவரது பான் எண்ணை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :