• JUST IN | சுட சுட

பஞ்சாப் முதல்வர் வீடு முற்றுகை!





பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பிர் சிங் சித்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் வீட்டை சிரோன்மணி அகாலிதளம் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பஞ்சாபில், கொரோனா தடுப்பூசியை முறைகேடாக தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்பட்டதாகக் கோரி, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பிர் சிங் சித்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில முக்கிய எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம் கட்சி வலியுறுத்தியது.இந்த விவகாரம் குறித்தும், கோவிட் பாதித்த குழந்தைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாகவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பல்பீர் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியினர், தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையில், பேரணியாக சென்று முதல்வர் அமரீந்தர் சிங் வீட்டை முற்றுகையிட சென்றனர்.

இதனையடுத்து பேரணியைத் தடுத்து நிறுத்திய போலீசார் சுக்பீர் சிங் பாதலை வீட்டுக்காவலில் வைத்தனர். முதல்வர் வீட்டை முற்றுகையிட்டவர்களை போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :