• JUST IN | சுட சுட

நோவாவேக்ஸ் : மற்றுமொரு கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம்!





கொரோனா தொற்றுக்கு எதிரான களமிறங்குகிறது நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி!

உலகம் முழுவதும் பல லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தட்டுப்பாடுகளை போக்கும் வகையில், நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு விரைவில் வர உள்ளது என அந்நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

29,960 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தடுப்பூசி பல நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த அளவில் கொரோனா தொற்றுக்கு எதிராக 90.4 சதவிகிதம் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், திரிபு கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து இந்த தடுப்பூசி செயல்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது ஆய்வு கட்டத்தில் இருக்கும் இந்த தடுப்பூசி நடப்பாண்டு மூன்றாம் காலாண்டில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மாதம் 100 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நோவாவேக்ஸ் தடுப்பூசி பொதுப்பயன்பாட்டிற்கு வருவதற்கு மிக நெருக்கமாக உள்ளது என" அதன் நிறுவன தலைவர் கூறியுள்ளார். மேலும் இந்த தடுப்பூசி NVX-CoV2373 ஆக அறியப்படுகிறது. இது 2-8 டிகிரி செல்சியசில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் நிறுவனம் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் தற்போது வரை 38,03,804 பேர் உயிரிழந்துள்ளனர். 2.39 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :