• தினம் ஒரு சூப்

ஆரோக்கிய சூப்.


- ஆர். பிருந்தா இரமணி, மதுரை.

தேவையானவை:

முருங்கைக் கீரை - 1 கைப்பிடி

தக்காளி - 1

பாசிப்பருப்பு - 1 மேசைக் கரண்டி

சோம்பு - 1 மேசைக் கரண்டி

புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது

சின்ன வெங்காயம் - 6

பூண்டுப் பற்கள் - 6 இஞ்சி - சிறு துண்டு

நெல்லிக்காய் - 2

தண்ணீர் - 4 டம்ளர் கடைசியில் கலக்க:

உப்பு - தேவையானது

வறுத்து, அரைத்த ஜீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி

மிளகுத் தூள் - தேவையானது

செய்முறை:

முருங்கைக் கீரை முதல் தண்ணீர் வரை உள்ள பொருட்களை ஒரு குக்கரில் போட்டு 3 விசில் விட்டு வேக வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி உப்பு, ஜீரகத்தூள், மிளகுத்தூள் கலந்து குடிக்கவும்.

பின்குறிப்பு: நெல்லிக்காய், தக்காளி, இஞ்சி, வெங்காயம், பூண்டு இவைகளை கேரட் சீவியில் சீவிப் போடலாம். * விரும்பாதவர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்த்து விடலாம். இந்த சூப்பை இப்போது எங்கள் வீட்டில் காலை 11 மணிக்குத் தினம் குடிக்கிறோம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :