• தினம் ஒரு சூப்

கார்ன் சூப்


வாணி கணபதி, பள்ளிக்கரணை

தேவையான பொருட்கள்:

.ஸ்வீட் கார்ன் வேகவைத்து உதிர்த்த முத்துக்கள் ..1/2 கப்

தக்காளி.1

இஞ்சி துண்டுகள்.1/2 ஸ்பூன்

மிளகுத்தூள்.1 ஸ்பூன்

உப்பு..தேவையானது

மல்லி தழை புதினா.- பொடியாக நறுக்கியது . ஒவ்வொரு டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் .1 டேபிள் ஸ்பூன்

பால்1 கப்

செய்முறை: ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு உருகி வரும் போது பொடியாக நறுக்கிய தக்காளி இஞ்சி. மல்லி புதினா .வேக வைத்த கார்ன் போட்டு வதக்கவும். அத்துடன் பாதியளவு கார்ன் மட்டும் சேர்த்து வதக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும் உப்பு சேர்க்கவும்.பிறகு மீதமுள்ள கார்னை ஒரு டம்ளர் தண்ணீரில் மசித்து சூப் கலவையில் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், காய்ச்சி ஆறவைத்த பாலை சேர்த்து .ஒரு கொதி வந்ததும் மிளகு தூள் தூவி இறக்கவும்.. அருமையான சூப் தயார்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :