• தினம் ஒரு சூப்

ஹாட் அண்ட் ஸோர் வெஜ் சூப்


ஜெயஸ்ரீ சாய்நாத்,

தேவையான பொருட்கள்

பொடியாக அரிந்த காரட் – 2 டேபிள் ஸ்பூன்;

பொடியாக அரிந்த முட்டை கோஸ் – 2 டேபிள் ஸ்பூன்;

பொடியாக அரிந்த குடைமிளகாய் – 2 டேபிள் ஸ்பூன்

பொடியாக அரிந்த பச்சை மிளகாய் – அரை டீஸ்பூன்

கார்ன் ப்ஃளோர் – 2 டீஸ்பூன்

சோயா சாஸ் – ½ டீஸ்பூன்

சில்லி சாஸ் – அரை டீஸ்பூன்

உப்பு – ருசிக்கு ஏற்ப

செய்முறை –

ஒரு சாஸ் பானில் காரட், முட்டை கோஸ், குடைமிளகாய் போட்டு சிறிது வதக்கி, 200 மி. லி நீர் ஊற்றி வேக விடவும், உப்பு சாஸ்கள் சேர்த்து, கார்ன் ப்ஃளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வினிகரும் சேர்த்து இறக்கினால் சுடச்சுட ஹாட் அன்ட் ஸோர் வெஜ் சாஸ் ரெடி! சூடாக செர்வ் செய்யவும்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :