• தினம் ஒரு சூப்

முருங்கைப் பூ சூப்


- ஜெயா சம்பத், கொரட்டூர்.

தேவையானவை:-

முருங்கைக்கீரை -2 கைப்பிடி,

சின்ன வெங்காயம் -10,

தக்காளி -1,

பச்சை மிளகாய் -2,

பூண்டு -2பல்,

கடுகு,சீரகம், மிளகுத் தூள்,மஞ்சள் தூள்,உப்பு,- சிறிதளவு.

கறிவேப்பிலை,இஞ்சி,கொத்துமல்லி- தேவைக்கேற்ப.

எண்ணெய் – தாளிக்க.

செய்முறை :-

முதலில் வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை,

கொத்துமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டைத் தட்டி, முருங்கைக்கீரையைப்

பூவோடு ஆய்ந்து...வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து,எண்ணெய் ஊற்றி, கடுகு சீரகம் சேர்க்கவும்.

பின் வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு பொன் நிறமாக வதக்கவும்.

பிறகு தட்டி வைத்துள்ள இஞ்சி பூண்டு, நறுக்கிய தக்காளியையும்

போட்டு வதக்கவும்.கடைசியில் மஞ்சள் தூள் போட்டு,கறிவேப்பிலை கொத்துமல்லி, ஆய்ந்து வைத்துள்ள முருங்கைக்கீரையையும் சேர்த்து,நன்கு

கிளறவும்.தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். அடுப்பை அணைத்து விட்டு, சூப்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி,சுடச்சுடப் பரிமாறவும்.

இரும்புச் சத்து நிறைந்த இந்த முருங்கைக்கீரை சூப்பை,வாரம் மூன்று நாட்கள் குடித்து வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ருசியான சத்தான இந்த சூப் எல்லா வயதினருக்கும் ஏற்றது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :