• தினம் ஒரு சூப்

முருங்கைக்கீரை சூப்


சுந்தரி காந்தி; பூந்தமல்லி

தேவையான பொருட்கள்:

முருங்கைக் கீரை – 2 கப்

சீரகம் – ½ டீஸ்பூன்;

பூண்டு – 3 பற்கள்

இஞ்சி துருவல் – 1 டேபிள் ஸ்பூன்;

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது);

தண்ணீர் – 3 கப்;

உப்பு – தேவையான அளவு

மிளகு – தேவையான அளவு;

எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்கவும். அதில் பூண்டு, இஞ்சி துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கிபின் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்களி நன்கு வெந்ததும் அத்துடன் முருங்கைக்கீரை சேர்த்து நான்கு நிமிடம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி, நான்கு நிமிடம் வேக விடவும் இறுதியாக மிளகு , உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் முருங்கைக்கீரை சூப் ரெடி. சுவையான,சத்தான இந்த சூப் காபி, டீ க்கு நல்ல மாற்று. மேலும் எல்லா வயதினருக்கும் ஏற்றது.8. பூண்டு, வெங்காயம் சேர்காமலும் செய்யலாம்.

-------------------

Comments

V.Avoudainayagam says :

பெயரில் ` கை ` மட்டுமே இருந்தாலும் சக்தி உடலில் எல்லா பாகங்களுக்கும்...!!!

Kavitha Thamaraiselvan says :

சூப்பர், குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இரும்பு சத்து குறைபாட்டை நீக்கி உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும்.

கே.ஆர். உதயகுமார் says :

முரூங்கையின் மகத்துவமே தனி தான்.

Raja says :

Very nice narration. Most opt item for the present time of corona. This is medicinal plus healthy soup.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :