• தினம் ஒரு சூப்

வெள்ளரி- வாழைத்தண்டு சூப்.


ஆர். ராதிகா, திருவான்மியூர்.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1

வாழைத்தண்டு - ½ கப் (நறுக்கியது)

பால் - 150 மி.லி

சோளமாவு - அரை ஸ்பூன்

மிளகுத்தூள் மற்றும் உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

வெள்ளரிக்காயை தோல்சீவி, ஒரு பாதியை பொடியாக நறுக்கி வைக்கவும். மீதி பாதியை வாழைத்தண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சோளமாவை சிறிது தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, நறுக்கிய வெள்ளரித்துண்டுகள் சேர்த்து மிதமான தீயில் சிறிது வதக்கவும். பின் பால் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிடவும். அதனுடன், அரைத்த விழுதுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் கரைத்த சோளமாவு சேர்த்து நன்றாக கொதித்ததும் இறக்கி வைத்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து சூடாக அருந்தவும். வாழைத்தண்டு நார்ச்சத்து நிரம்பியது. வெள்ளரி நீர்ச்சத்து நிரம்பியது. அதனால் இந்த சூப் சத்துள்ள மற்றும் அதிக செலவில்லாத சூப்.

Comments

Hemalatha says :

Will try. Seems to be yummy

ushamuthuraman says :

very tasty. really healthy soup. thanks for the valuble recipe.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :