• GLITTERS | பளபள

7 பேர் விடுதலைக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகம் குரல்!


- வி.கார்த்திகேயன்





இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு 31ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர்களின் விடுதலைக்காக தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் இணையத்தில் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். குறிப்பாக பேரறிவாளன் விடுதலைக்காக அவர் தாய் அற்புதம்மாளுக்கு ஆதரவாக ஹேஷ்டேக்குகள் பிரபலமாகி வருகின்றது.

ராஜீவ்காந்தி கொளி தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்த 7 பேரின் விடுதலைக்கு அனுமதி கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிலும் குறிப்பாக பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.

தற்போது பேரறிவாளன் ஒரு மாத பரோலில் விடுப்பில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி இணையதள பரப்புரை தொடங்கியுதுள்ளது.

அதில் விசாரணை என்று பெற்றோரிடம் சொல்லி அழைத்துச் சென்று 32 ஆண்டுகள் ஆகின்றது. 31 ஆண்டுகளாக ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும் அற்புதம் அம்மாவின் சமரசமற்ற போராட்டத்தில் துணை நிற்போம் விடுதலையை வென்றெடுப்போம் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் இதற்கு ஆதரவாகவும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரியும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியும் குரல் கொடுத்துள்ளார்.

அவர் பதிவிட்டிருப்பதாவது: எத்தனையோ நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டார்கள். சில தூக்குத் தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பும் அளித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு எப்போது விடுதலை? சட்டம் அரசைக் கைகாட்ட, அரசு கவர்னரைக் கைகாட்ட, இப்படியே செல்கிறது இவர்களீன் வாழ்க்கைப் போராட்டம்! இனியாவது யாரோ ஒருவர் கைநீட்டி அந்தப் பிள்ளையை அவர் தாயோடு வாழவையுங்கள்.

- இவ்வாறு சுரேஷ் காமாட்சி குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்களும் அற்புதம்மாளுக்கு ஆதரவாக #31yearsofInjustice என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ட்ரென்ட் செய்து வருகின்றனர்.




Comments

sowmiya narayanan says :

why not recommended for any award,govt class i officer post,several crores of compensation,fatty pension till death of 4 generations,govt house esp independent house and unlimited foreign travel to justify rajiv killig

sowmiya narayanan says :

why not recommended for any award,govt class i officer post,several crores of compensation,fatty pension till death of 4 generations,govt house esp independent house and unlimited foreign travel to justify rajiv killig

sowmiya narayanan says :

why not recommended for any award,govt class i officer post,several crores of compensation,fatty pension till death of 4 generations,govt house esp independent house and unlimited foreign travel to justify rajiv killig

balasanthanam says :

this is the biggest shame for the Indian sovereignty. what about other officers who last their life as well as hand, leg, eyes. and total life itself. Rajiv gandhi assasiation is an brurtal gang murder of our Indian sovereignty. the least spite like thiruma or osi soru veeramani or any other ditch persanality who supports for its let them be with prison in one to one equation.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :