• SPARKLES | மினுமினு

காஷ்மீரில் திருப்பதி கோவில் கிளைக்கு அடிக்கல் நாட்டல்!


- சுமதி தேவராஜன்.





காஷ்மீரில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கிளை ஒன்றைக் கட்டுவதற்காக நேற்று (ஜூன் 13) அடிக்கல் நாட்டப்பட்டது.

ஜம்மு அருகே மஜீன் கிராமத்தில் 62.06 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேத பாட சாலை, அர்ச்சகர்கள் குடியிருப்பு, பக்தர்கள் தங்குவதற்கான வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் கட்டப்பட உள்ளன. இந்த

கோயிலின் நிர்வாகம் ஆந்திராவின் திருமலை-திருப்பதியில் உள்ள ஏழுமையான் கோவிலை நிர்வகிக்கும் தேவஸ்தானத்தின் கீழ் இருக்கும் என்று காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

நேற்று (ஜூன் 13) ஜம்முவில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜி.கிஷென் ரெட்டி மற்றும் ஜிதேந்திர சிங், மற்றும் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர். திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் இந்த திருப்பதி கோவிலின் கிளை ஏழுமலையான் கோயில் அமைவதால், அந்த பகுதியில் சுற்றுலா மேம்படுவதோடு, பொருளாதாரமும் மேம்படும் என காஷ்மீர் அரசின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

‘’ ஏற்கனவே ஜம்முவில் வைஷ்ணோ தேவி ஆலயம் மற்றும் அமர்நாத் குகைக் கோயில் ஆகிய உலகப் பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் இருக்கின்றன. அந்த வகையில் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஜம்மு ஏழுமலையான் கோயிலின் உள்கட்டமைப்பு இருக்கும்" என்று காஷ்மீர் அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, "ஜம்மு கோயில்களின் நகரம், நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி பெருமாள் கோயில் அமைவது மிகவும் சிறப்பு" என்றார்.

மேலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட கோயிலுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு, உள்ளூர் மக்களுக்கு பயனளிக்கும் என்பதோடு பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்று ரெய்னா கூறினார்.




Comments

M S Arun kumaar says :

Very very happy to hear this news and lord Venkanna will certainly bless India from the top place of India to have peace evérywhere. Om namo venkatesha. Pranams

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :