• JUST IN | சுட சுட

ரஜினி தனி விமானத்தில் அமெரிக்கா பயணம்: மத்திய அரசு அனுமதி!





நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் நிலையில், கொரோனா 2-ம் அலை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து படப்பிடிப்பு நடந்த ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். இந்நிலையில், உடல்நிலை கோளாறு காரணமாக நடிகர் ரஜினி, தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம அலையின் தீவிரம் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு இந்தியாவில் தடைவிதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசிடம் அனுமதிக்காக கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக இரு மத்திய அமைச்சர்களை ரஜினி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உரையாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மத்திய அரசின் அனுமதியின் பேரில், 14 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்ட சிறப்பு தனி விமானத்தில், ரஜினியும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளீயாகியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :