• TRENDING | பர பர

வாளால் கேக் வெட்டிய எலிசபெத் மகாராணி: வைரலாகும் வீடியோ!





பிரிட்டனில் உள்ள கார்ன்வால் நகரில் இப்போது ஜி7 மாநாடு நடைபெற்று வருகிறது இந்த ஜி7 மாநாட்டு நிகழ்வில் 95 வயதான பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் வாள் ஏந்தி கேக் வெட்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

பிரிட்டனில் உள்ள கார்ன்வால் நகரில் நடந்து வரும் ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற கொண்டாட்டதில் மகாராணி எலிசபத் கேக் வெட்டியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக வாள் கொண்டு கேக்கை வெட்டியுள்ளார். ராணி வாள் கொண்டு வெட்ட முயன்ற போது கத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. `இது கொஞ்சம் வித்தியாசமானது` என ராணி தெரிவித்துள்ளார். அதை கேட்டு அங்கு குழுமியிருந்த பலரும் சிரித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் மகாராணி எலிசபெத் தன் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடவில்லை. அந்த வகையில் இந்த நிகழ்வு மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றனர் பிரிட்டன் மக்கள். இந்த ஜி7 மாநாட்டில் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வின் ஒருபகுதியாக நடைபெற்ற கொண்டாட்டதில் மகாராணி எலிசபத் கேக் வெட்டியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக வாள் கொண்டு கேக்கை வெட்டியுள்ளார். ராணி வாள் கொண்டு வெட்ட முயன்ற போது கத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. `இது கொஞ்சம் வித்தியாசமானது` என ராணி தெரிவித்துள்ளார். அதை கேட்டு அங்கு குழுமியிருந்த பலரும் சிரித்து மகிழ்கின்றனர்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :