• JUST IN | சுட சுட

டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!





டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு மர்ம நபர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகிலேயே இரண்டாவது சிறந்த விமான நிலையம் என்று பெயர் பெற்ற டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு, வருடந்தோறும் சுமார் 4 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று இந்த விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அந்நபர் தொலைபேசியில் விமான நிலைய ஊழியர்களைத் தொடர்பு கொண்டு பேசி, அங்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் இன்னும் சற்று நேரத்தில் அந்த வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. போலீஸார் மோப்பநாய் சகிதம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :