• JUST IN | சுட சுட

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கக் காரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!





தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழநாட்டில் போலி மதுபானங்கள், மற்றும் கள்ள மதுபானங்கள் புழக்கம் ஏற்பட்டு மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே அதிகாரபூர்வமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் இந்த உத்தரவு திரும்ப பெறப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’கட்டுப்படுவோம்! கட்டுப்படுத்துவோம்!’ என்ற வீடியோ மூலம் தெரிவித்ததாவது:

மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மக்களின் ஒத்துழைப்பு அவசியம். முழு ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றிய மக்களுக்கு நன்றி.

மேலும், கொரோனா பரவலுக்கு இன்னும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை, ஆகவே தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என மக்கள் அலட்சியமாக சுற்றித்திரிய வேண்டாம். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில இப்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. போலி மது, கள்ள மது போன்றவற்றின் புழக்கம் மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் ஊரடங்கு தளர்வு உத்தரவு திரும்ப பெறப்படும்

-இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் விரைவில் பொது போக்குவரத்து சேவை தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :