• JUST IN | சுட சுட

இஸ்ரேலில் ஆட்சி மாற்றம்: 8 கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்தது!





இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தலில் ஒரெயொரு வாக்கு வித்தியாசத்தில் ஆளூங்கட்சி தோல்வியுற்றௌ, 8 கட்சிகள் கொண்ட எதிரணி ஆட்சியைக் கைப்பற்றியது.

இஸ்ரேலில் 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளுங்கட்சி ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றதால், அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து தேர்தலில் வென்ற 8 கட்சிகள் அடங்கிய கூட்டணி சார்பில் புதிய பிரதமராக் நஃப்தலி பென்னட் பதவியேற்றார்.

இஸ்ரேலில் 120 இடங்களை கொண்ட பாராளுமன்றத்தில் சமீபத்தில் தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் 8 எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு 60 எம்பிக்கள் ஆதரவு கிடைத்தது. மீதியுள்ளவர்களீல் ஒரு எம்பி வாக்கெடுப்பை புறக்கணித்ததால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சிக்கு 59 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

அதனால் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் எதிர்க்கட்சி கூட்டணி வென்றது. இதற்கு நெதன்யாகு கட்சியின் ஆதரவு எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆட்சியமைத்துள்ள யமினா கட்சித் தலைவர் நஃப்தலி பென்னட் இஸ்ரேலின் புதிய பிரதமராக இரண்டு ஆண்டுகள் மட்டும் வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே சுழற்சி முறையில் பிரதமர் பதவி வகிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. தற்போது யமினா கட்சித் தலைவர் நஃப்தலி பென்னட் பதவியேற்க, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மற்ற கட்சிகளின் சார்பில் பிரதமர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நஃப்தலி பென்னட் அமைச்சரவையில் 9 பெண்கள் உள்பட 27 பேர் இடம்பெற்றுள்ளனர். ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமர் அறிவித்து இருக்கிறார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :