• JUST IN | சுட சுட

ஹாலிவுட் சினிமா அவதார்: இப்போது வீடியோ கேமில் அறிமுகம்!





ஹாலிவுட்டில் 2009-ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அவதார். இதையடுத்து இந்த திரைப்படத்தின் 2-வது பாகத்தை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் உருவாக்கி வருகிறார். இந்நிலையில் அவதார் படத்தின் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யூபிஐ சாப்ட் நிறுவனம் கணினி விளையாட்டு ஒன்றை வடிவமைத்து உள்ளது.

Avatar: Frontiers of Pandora என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த கணினி விளையாட்டின் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த வீடியோ கேமை விளையாடி மகிழ்ந்தனர்.

அவதார் போன்றே இந்த வீடியோ கேமிலும் ஹீரோ ஒரு கற்பனை உலகின் தீய சக்திகளை எதிர்த்து போராடும் சாகசங்கள் நிறைந்த காட்சிகள் உள்ளாதாக அமைக்கப் பட்டுள்ளது. ஆனாலும் இந்த அவதார் வீடியோ கேம் வர்த்தக ரீதியில் வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று அதை உருவாக்கியுள்ள யூபிஏ சாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :