• JUST IN | சுட சுட

61 நாள் மீன்பிடி தடை காலம்: இன்றுடன் முடிவு!





தமிழகத்தில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் இந்த 61 நாள் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் மீன் வளத்தை மேம்படுத்தும் விதமாக வருடம்தோறும் வங்கக்கடலில் விசைப் படகுகளில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடமும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் இந்த மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இந்தகாலகட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதால், மீன் பிடி தடைகாலத்தின் போது மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

6500 விசைப்படகுகள் இந்த மீன்பிடி தடைகாலத்தில் மீன் பிடிக்க செல்லாமல் இருந்தது. இந்த தடைகாலத்திலும் பைபர் மற்றும் கட்டுமரங்கள் மட்டும் அவ்வப்போது மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தது.

அந்தவகையில் இந்த 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மீனவர்கள் இன்று அதிகாலை முதல் மீண்டும்கடலுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :