• JUST IN | சுட சுட

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி : ஜோகோவிச் இறுதிப் போட்டிக்குத் தேர்வு!





பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம். ஏனெனில், உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) - மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்) ஆகியோர் அரையிறுதி ஆட்டத்தில் நேரடியாக மோதினர். முன்னணி வீரர்கள் மோதியதால் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

போட்டி தொடங்கியது முதல் விறுவிறுப்பாகவே இருந்தது.

பின்னர் முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை வகித்தார். அதன்பிறகு சுதாரித்து ஆடிய ஜோகோவிச் இரண்டாவது சுற்றை 6-3 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 7-6 என்ற கணக்கிலும் வென்றார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். இதன்மூலம் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்தப் போட்டி சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது. ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 6ஆவது முறை ஆகும். இதன்படி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை, நோவக் ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :