• JUST IN | சுட சுட

ரூ 5000 நிவாரணம் தேவை: ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் கோரிக்கை!





மதுரையில் கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ள வரை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கக்கோரி இந்து முன்னணி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

கொரோனா தொற்று ஊரடங்கால் ஆட்டோ தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதங்களாக ஆட்டோ தொழில் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கினால் மிகவும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் காக்க தமிழக அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டும். பொதுமுடக்கம் உள்ளவரை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணமாக மாதம்தோறும் 5000 ரூபாய் வழங்க வேண்டும்.

மேலும் வாகனங்களின் இன்சூரன்ஸ், வரி, எப்.சி கட்டணம் ஆகியவற்றை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

_ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :