• JUST IN | சுட சுட

சிறையில் ஊட்டச்சத்து உணவு தேவை: மல்யுத்தவீரர் சுஷில் குமாரின் மனு நிராகரிப்பு!





ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார், தன் சக வீரரைக் கொலை செய்த குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சிறையில் தனக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.

.

ஒலிம்பிக் போட்டிகளில் 2 முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார். கடந்த மே மாதம் சக மல்யுத்த வீரரான சாகர் தான்கட் என்பவரை டெல்லியில் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து சுஷில் குமார் தலைமறைவானார். இது தொடர்பாக வழக்கு பதிந்த டெல்லி போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி, சுஷில் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது டெல்லி மாண்டொலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தான் மல்யுத்த வீரர் என்பதால் தனக்கு சிறையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகள், உடற்பயிற்சி செய்ய கருவிகள் வழங்கும்படி கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி சத்வீர் சிங் லம்பா, அந்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். சுஷில் குமாரின் கோரிக்கை அத்தியாவசிய தேவையானது இல்லை என்பதால் அவது ஏற்கப்படவில்லை. மேலும் சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறி சுஷில் குமாரின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :