• TRENDING | பர பர

டிவிட்டர் வேணாம்: ஆப்பிரிக்காவில் உற்சாகமாய் கூவுகிறது இந்திய கூ!





ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் அதன் அதிபர் முகம்மது புஹாரியின் டிவிட்டர் பதிவை, சமூக ஊடக தளத்தின் கொள்கையை மீறுவதாக உள்ளது என குற்றம் சாட்டி அகற்றியது ட்விட்டர் நிறுவனம். மேலும் அவரது ட்விட்டர் கணக்கை 12 மணி நேரம் தடை செய்தது.

இதையடுத்து டிவிட்டர் நிறுவனம் பாரபட்சமான முறையில் செயல்படுவதாக நைஜீரியாவில் டிவிட்டருக்குத் தடைவிதித்தார்.

இதையடுத்து, டிவிட்டருக்குப் போட்டியாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள நிறுவனமான கூ-வுக்கு நைஜீரியாவில் வெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. இதன்மூலம், சர்வதேச அரங்கில் சிறகடிக்கத் தொடங்கி விட்டது. கூ.

மஞ்சள் நிற பறவை போல தோன்றும் இந்த கூ செயலி, அகமதாபாத் ஐஐஎம்-மின் முன்னாள் மாணவரான அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடாவட்கா ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ட்விட்டருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த கூ-வுக்கு கணிசமான அளவில் பயனர்கள் உள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 கோடி பயனர்கள் என்ற இலக்கை நோக்கி கூ செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :