• TRENDING | பர பர

சீன மொழியில் ரீமேக் ஆகிறது திரிஷ்யம் திரைப்படம்!





மலையாள சினிமாவில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம்-2 திரைப்படம், அடுத்ததாக சீன மொழியில் ரீமேக் ஆக உள்ளது. திரிஷ்யம் முதல் பாகத்தின் ரீமேக்கைப் போல், தற்போது 2-ம் பாகத்தின் திரைக்கதையிலும் சிறிய மாற்றம் செய்ய உள்ளனர்.

மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் "த்ரிஷ்யம்". மிகவும் விறுவிறுப்பான திரில்லர் கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதே திரைப்படம் தமிழில் ‘’பாபநாசம்’’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உருவானது. தமிழில் கமல்ஹாசன் மற்றும் ,கௌதமி நடித்திருந்தனர்.

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘’திரிஷ்யம்’ படம் 2019-ம் ஆண்டு பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இதனையடுத்து சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷ்யம் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு சென்ற ஆண்டு ஷாம் குவா இயக்கத்தில் "Wu Sha" என்னும் தலைப்பில் டிசம்பர் -13 அன்று வெளியிடப்பட்டு 168 மில்லியன் டாலர் வருமானத்தை பெற்றது.

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரிஷ்யம் 2 திரைப்படத்தையும் இப்போது சீன மொழியில் ரீமேக் செய்ய்யப்படுகிறது. சீனாவிலும் இப்படம் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :