• தினம் ஒரு சுண்டல்

சோயா மூவர்ண சுண்டல்


நளினி ராமசந்திரன், கோயம்பத்தூர்

தேவை

வெள்ளை சோயா - 1 கப்

துருவிய கேரட். - 1 கப்

நறுக்கிய குடைமிளகாய் - 1 கப்

துருவிய தேங்காய் - 1/4 கப்

இஞ்சி - சிறிதளவு

பச்சைமிளகாய் - சிறிதளவு

கொத்தமல்லி தழை - சிறிதளவு

கறிவேப்பிலை. - சிறிதளவு

நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்

கடுகு - 1 டீ ஸ்பூன்

சீரகம் - 1 டீ ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1 டீ ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 2 டீ ஸ்பூன்

பெருங்காயம் - 1/4 டீ ஸ்பூன்

செய்முறை

வெள்ளை சோயாவை இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் தண்ணீரை வடிகட்டி குக்கரில் உப்பு போட்டு வேக வைக்கவும். அடுப்பில் வானலியை ஏற்றி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம்தாளித்து, வெங்காயம் ,குடைமிளகாய்,கேரட் போட்டு வதக்கவும். மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, அரைத்து இந்த விழுது, வெந்த சோயா ஆகியவற்றை வானலியில் வேகும் காய்களுடன் சேர்த்து ஒன்றாக கிளறவும். பெருங்காயம்,கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான, சத்தான சோயா மூவர்ண சுண்டல் ரெடி.

Comments

வீ. கணேஷ் says :

வாழ்த்துக்கள்

R. Chandrasekaran says :

Nice receipe to eat

Chandrasekaran Rajagopalan says :

Congrats

VidhyaSridhar says :

Excellent recipe. Must try.

Rama Harish says :

Yet another healthy and tasty snack.... Have always loved and followed your recipes

Archana Krishnamoorthy says :

Fresh burst of ingredients Excellent recipe

Sumitra says :

Great Nalini..healthy tasty snack..

Jayaraman says :

New type of Sundal... Innovation in traditional recipes.

Sadhna says :

Healthy refreshing snack

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :