• தினம் ஒரு சுண்டல்

கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல்


ராதிகா, திருவான்மியூர், சென்னை.

ஒரு கப் கடலைப்பருப்பை வெறும் சட்டியில் லேசாக வறுத்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிய வைத்துக் கொள்ளவும். பின் இனிப்புக்குத் தகுந்தபடி அரைகப் (அல்லது சிறிது கூடுதலாக) பொடி செய்த வெல்லத்தை கரைய விட்டு, வடிகட்டி, சுத்தம் செய்து, அதோடு அரைகப் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி கெட்டியானதும், வெந்த கடலைப்பருப்பை சேர்த்து உதிர் உதிராக கிளறி (குழையக் கூடாது) சிறிது ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி வைக்கவும்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :