• தினம் ஒரு சுண்டல்

ராஜ்மா கட்டா மிட்டா சுண்டல்


ஜெயா சம்பத், கொரட்டூர், சென்னை

தேவையானவை :-

ராஜ்மா - 2கப்,

பச்சை மிளகாய் - 3,

வெல்லம் - சிறு கட்டி,

எலுமிச்சைச்சாறு -1 ஸ்பூன்,

தேங்காய் துருவல் -3 டேபிள் ஸ்பூன்,

கடுகு சீரகம் - தாளிக்க,

கறிவேப்பிலை கொத்தமல்லி, எண்ணெய், உப்பு. – தே. அளவு

செய்முறை :-

ராஜ்மாவை நன்கு கழுவி, 12 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், கடுகு, சீரகம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், பின் வெந்த ராஜ்மா, உப்பு, வெல்லம் சேர்த்துக் கிளறவும். கடைசியாக தேங்காய் துருவல், எலுமிச்சைச்சாறு சேர்த்து, கலக்கவும். புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையில் கட்டா மிட்டா சுண்டல் ரெடி.

சத்தான ருசியான இந்தச் சுண்டலை குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி உண்பர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :