• JUST IN | சுட சுட

#Breaking: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!





நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலை தீவிரமானதைத் தொடர்ந்து பல மாநிலங்களிலும் ஊரடங்கைக் கடுமையாக்கியது. அந்த வகையில்

தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த முழு ஊரடங்கு உத்தரவு 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. அதையடுத்து ஜூன் 7-ம் தேதி சில தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments

ஆா்.நாகராஜன் says :

மக்களிடம் பயம் இல்லை சமுக இடைவெளியை கடைபிடிப்பதில்லை தளா்வு தேவையில்லை கட்டுப்படாத ஜனங்கள் நாடு கெட்டு குட்டிச்சுவராய் போய்விட்டது ஊரடங்கு போட்டால் வாழ்வாதாரம் போய்விட்டதாம் வருமானம் இல்லையாம் புலம்புகிறான் டாஸ்மாக்கை திறந்து விட்டால் ஒரே நபா் பத்து பாட்டில்களை வாங்குகிறான் குடிகாரனாவது திருந்துவதாவது குடி வெறியில் சாணிடைசரை குடிக்கறான் குடிக்காக (மனைவியைக் கூட அடகு வைத்தாலும் வைப்பான்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :